search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளையும் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்
    X

    விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளையும் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்

    • தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து 2022-23-ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்குவதற்காக நாளை மறுநாள் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
    • கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் முதல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    விழுப்புரம்:

    கொரோனா காரணமாக பள்ளி- கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி முதல் பள்ளி- கல்லூரிகள் அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டன. கடந்த 1½ ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாததால் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், ஆன்லைன் வகுப்பு மூலமாகவும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. மேலும் கொரோனா ஊரடங்கினால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் மூலமாகவும் கல்வி கற்பிக்க அரசு வழிவகை செய்தது.

    இந்நிலையில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான இறுதித்தேர்வுகள் கடந்த மே மாதம் முடிந்ததை தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஒரு மாத காலம் கோடை விடுமுறை விடப்பட்டது. மீண்டும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்தது.

    அதன்படி தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து 2022-23-ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்குவதற்காக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி மாணவ- மாணவிகளின் நலனை கருதி அனைத்து பள்ளிகளையும் தூய்மைப்படுத்தும்படி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

    விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், நிதி உதவி பள்ளிகள், ஆதிதிராவிட நலப்பள்ளிகள், பகுதிநேர நிதி உதவி பள்ளிகள், சிறப்பு பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 1,806 பள்ளிகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் அரசின் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கப்படுகின்றன.

    இதையொட்டி இந்த பள்ளிகளின் வளாகம், வகுப்பறை, அறிவியல் ஆய்வகம், ஆசிரியர், தலைமை ஆசிரியர் அறைகள், கணினி அறை, குடிநீர் தொட்டி, கழிவறை உள்ளிட்ட அனைத்தும் தூய்மைப்பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

    Next Story
    ×