search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் மட்டும் செயல்பட வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு
    X

    நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் மட்டும் செயல்பட வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு

    • நெல்லை மாவட்ட குவாரிகள் சங்கம் சார்பில் முறையாக அனுமதி பெற்று செயல்படக்கூடிய குவாரிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
    • மாவட்ட கலெக்டரால் விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்து வழக்கம் போல் குவாரிகளில் இருந்து கற்களை லாரிகள் மூலம் ஏற்றிச்செல்ல டிரான்சிட் பாஸ் அனுமதியை வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டது.

    மதுரை:

    நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் கல்குவாரியில் கடந்த மே மாதம் 14-ந்தேதி இரவு திடீரென பாறை சரிந்து விழுந்தது. இதில் 4 தொழிலாளர்கள் சிக்கி பலியாகினர். இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் குவாரிகள், கிரசர்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக பல குவாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அபராதம் விதித்தார்.

    இந்த நிலையில் நெல்லை மாவட்ட குவாரிகள் சங்கம் சார்பில் முறையாக அனுமதி பெற்று செயல்படக்கூடிய குவாரிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும். மாவட்ட கலெக்டரால் விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்து வழக்கம் போல் குவாரிகளில் இருந்து கற்களை லாரிகள் மூலம் ஏற்றிச்செல்ல டிரான்சிட் பாஸ் அனுமதியை வழங்க வேண்டும். நெல்லை புவியியல் மற்றும் சுரங்க உதவி இயக்குநர் அனுமதி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி, அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் மட்டும் செயல்படவும், கல், ஜல்லி மற்றும் எம் சான்ட் போன்ற கனிமங்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என உத்தரவு பிறப்பித்தார்.

    மேலும் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ரூ. 300 கோடி மாவட்டம் நிர்வாகம் சார்பாக குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை மறுபரிசீலனை செய்யவும், குவாரிகளை மீண்டும் அளவீடு செய்து விதிமுறை மீறி இருந்தால் அபராதம் விதிப்பது குறித்து புதிய நோட்டீஸ் வழங்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    Next Story
    ×