search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர்ந்து ஏறுமுகம்: தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை நெருங்குகிறது
    X

    தொடர்ந்து ஏறுமுகம்: தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை நெருங்குகிறது

    • கடந்த 13-ந்தேதி மீண்டும் ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது.
    • வெள்ளி ஒரு கிராம் ரூ.74-க்கும், ஒரு கிலோ ரூ.74 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

    சென்னை :

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாத இறுதியில் ஒரு பவுன் ரூ.41 ஆயிரத்தை கடந்த நிலையில் தொடர்ந்து விலை உயருவதும், குறைவதுமான நிலையிலேயே நீடித்தது.

    ஆனால் பெரும்பாலும் தங்கம் விலை அதிகரித்த வண்ணமே இருந்தது. அதன்படி, கடந்த 9-ந்தேதி விலை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்தையும் கடந்தது. அதற்கு மறுநாளே விலை குறைந்து, ரூ.42 ஆயிரத்துக்கு கீழ் சென்றாலும், தொடர்ச்சியாக விலை உயர்ந்து கடந்த 13-ந்தேதி மீண்டும் ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது.

    பின்னர், இடையில் ஓரளவுக்கு விலை குறைந்து காணப்பட்டாலும், பெருமளவில் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை இருந்தது.

    அந்த வகையில் நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 323-க்கும், ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்து 584-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.32-ம், பவுனுக்கு ரூ.256-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 355-க்கும், ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. இதே நிலை நீடித்தால், இன்றோ (புதன்கிழமை) அல்லது நாளையோ (வியாழக்கிழமை) ஒரு பவுன் தங்கம் ரூ.43 ஆயிரத்தை தொட்டுவிடும்.

    இதற்கு முன்பு கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. அப்போது ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளி விலையை பொறுத்தவரையில், நேற்று கிராமுக்கு 70 காசும், கிலோவுக்கு ரூ.700-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.74-க்கும், ஒரு கிலோ ரூ.74 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

    Next Story
    ×