என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கே.கே.நகரில் டாஸ்மாக் கடையில் தீ விபத்து
  X

  தீ விபத்தில் வெடித்து சிதறி கருகி கிடக்கும் மது பாட்டில்கள்


  கே.கே.நகரில் டாஸ்மாக் கடையில் தீ விபத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னை கே.கே நகர் ராஜமன்னார் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
  • கடையில் இருந்த ஏராளமான மதுபாட்டில்கள் வெடித்து சிதறியது.

  போரூர்:

  சென்னை கே.கே நகர் ராஜமன்னார் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

  நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். நேற்று அதிகாலை 5 மணி அளவில் கடையில் இருந்து கரும்புகை கிளம்பியது பின்னர் சிறிது நேரத்தில் தீப்பிடித்து மள மளவென எரிய தொடங்கியது.

  இதை கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் அசோக் நகர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மதுபான கடை அருகில் உள்ள பார் ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

  இதில் கடையில் இருந்த ஏராளமான மதுபாட்டில்கள் வெடித்து சிதறியது. மேலும் அங்கிருந்த "ப்ரீசர் பாக்ஸ்" உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசமானது. இதன் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும்.

  இதுகுறித்து கடையின் மேற்பார்வையாளர் ராமதுரை கே.கே நகர் போலீசில் புகார் அளித்தார். கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ஏற்பட்ட மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  Next Story
  ×