search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.7 லட்சம் கேட்டு வெளிநாட்டுக்கு தந்தை கடத்தல்- சென்னை போலீசில் மகள் புகார்
    X

    ரூ.7 லட்சம் கேட்டு வெளிநாட்டுக்கு தந்தை கடத்தல்- சென்னை போலீசில் மகள் புகார்

    • பிரசன்னா குடும்ப கஷ்டங்களை காரணமாக கூறி தந்தையிடம் ரூ.25 லட்சம் கடனாக பெற்று கொண்டு கடனை திருப்பி தராமல் ஏமாற்றி விட்டார்.
    • கடந்த 10-ந்தேதி பிரசன்னா தந்தையிடம் வெளிநாட்டில் வசிக்கும் சிலர் தனக்கு பணம் தரவேண்டியுள்ளது நீங்கள் என்னுடன் வெளிநாட்டிற்கு வந்தால் அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.

    அண்ணாநகர்:

    சென்னை அண்ணாநகர் ஏ பிளாக் 15-வது தெருவில் வசிப்பவர் லட்சுமி (வயது40). இவர் நேற்று அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

    தனது தந்தை சக்திவேல் (70) தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தன் தாயுடன் வசித்து வருகிறார். என் தந்தை வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக பிரசன்னா (30) என்ற வாலிபர் தன் தாயாருடன் வாடகைக்கு இருந்து வந்தார்.

    பிரசன்னா குடும்ப கஷ்டங்களை காரணமாக கூறி என் தந்தையிடம் ரூ.25 லட்சம் கடனாக பெற்று கொண்டு கடனை திருப்பி தராமல் ஏமாற்றி விட்டார்.

    கடந்த 10-ந்தேதி பிரசன்னா எனது தந்தையிடம் வெளிநாட்டில் வசிக்கும் சிலர் தனக்கு பணம் தரவேண்டியுள்ளது நீங்கள் என்னுடன் வெளிநாட்டிற்கு வந்தால் அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.

    பின்னர் இருவரும் வெளிநாட்டை சுற்றி பார்த்து விட்டு வரலாம் என கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி எனது தந்தை சக்திவேல் கடந்த 10-ந்தேதி பிரசன்னாவுடன் ஐரோப்பிய நாட்டில் உக்ரைன் அருகே உள்ள ஒரு நாட்டிற்கு சென்றதாகவும், அங்கு பிரசன்னா எனது தந்தை சக்திவேலை அந்நாட்டவரிடம் அடமானம் வைத்து ரூ.7 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு அவரை விட்டு விட்டு வந்து விட்டார்.

    பின்னர் எனது தந்தை சக்திவேல் என்னை வாட்ஸ்அப் காலில் தொடர்பு கொண்டு பிரசன்னா தன்னை பணத்திற்கு விற்று விட்டு வந்து விட்டதாகவும், பணம் கொடுத்தால் மட்டுமே இவர்கள் என்னை விடுவிப்பார்கள் ஆகையால் எனது வங்கி கணக்கில் ரூ.7 லட்சம் பணத்தை செலுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் எனது தந்தையை மீட்டு தரவேண்டுமென்றும் அதேநேரத்தில் என் தந்தையை ஏமாற்றி வெளிநாடு அழைத்து சென்று அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட பிரசன்னா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

    Next Story
    ×