search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிமுத்தாறு-மணிமங்கலத்தில் மீன்விதைப்பண்ணை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
    X

    மணிமுத்தாறு-மணிமங்கலத்தில் மீன்விதைப்பண்ணை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    • ரூ.43.50 கோடி செலவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
    • நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அனிதா. ஆர்.ராதாகிருஷ்ணன், மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், திருக்கழுக்குன்றம் வட்டம், புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பத்தில், ரூ.16.80 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம் மற்றும் கடல் அரிப்பு தடுப்பு பணிகள்; தென்காசி மாவட்டம், கடனா அரசு மீன்விதை பண்ணையில் ரூ. 5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மீன்வளர்ப்பு தொட்டிகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    மணிமுத்தாறில் ரூ.2.50 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட்ட மீன் விதைப் பண்ணை; ஸ்ரீவில்லிபுத்தூர், பிளவக்ல்லில் ரூ.1.81 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட அரசு மீன்விதைப் பண்ணை.

    மணிமங்கலம் மீன்விதைப் பண்ணை ரூ.2.85 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டதுடன், அப்பண்ணையில் புதிதாக கட்டப்பட்டுள்ள வண்ணமீன் வளர்ப்புக் கூடம் மற்றும் பயிற்சி மையம்; பெரியகுளம் வட்டம், மஞ்சளாறு கிப்ட் திலேப்பியா மீன்குஞ்சு பொரிப்பகத்தில் ரூ.81 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு சுவருடன் கூடிய மீன் வளர்ப்பு குளம்.

    வைகை அணையில் ரூ.1.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மீன்விதை வளர்ப்பு தொட்டிகள்; பழையார் மீன்பிடிதுறைமுகத்தில் ரூ.2.87 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள படகுகள் பழுது பார்க்கும் தளம் மற்றும் ரூ.1.17 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மீன் உலர் தளம்.

    மதுரை பேச்சியம்மன் படித்துறையில் ரூ.1.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கான அலுவலகக் கட்டடம்; ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் ரூ. 78 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகக் கட்டிடம்.

    தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் ரூ.1.50 கோடி செலவிலும், தருவைக்குளம் மீன் இறங்குதளத்தில் ரூ.1.75 கோடி செலவிலும், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.1.50 கோடி செலவிலும், குளச்சல் மீன்பிடிதுறைமுகத்தில் ரூ.1.50 கோடி செலவிலும் கட்டப்பட்டுள்ள பனிக்கட்டி உற்பத்தி நிலையங்கள் என மொத்தம் ரூ.43.50 கோடி செலவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அனிதா. ஆர்.ராதாகிருஷ்ணன், மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×