என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கன்னியாகுமரியில் 7-ந்தேதி நடைபெறும் ராகுல் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை
  X

  கன்னியாகுமரியில் 7-ந்தேதி நடைபெறும் ராகுல் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் 56 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி, 11-ந் தேதி காலையில் திருவனந்தபுரம் சென்றடைகிறார்.
  • கேரளாவில் 18 நாட்கள் பாதயாத்திரை செல்கிறார். தினமும் ராகுல் காந்தி 20 முதல் 25 கிலோ மீட்டர் தூரம் நடக்க திட்டமிட்டு உள்ளார்.

  நாகர்கோவில்:

  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்ரா மேற்கொள்கிறார்.

  இதன் மூலம் அவர் மக்களை சந்திக்கிறார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,750 கிலோ மீட்டர் தூரம் 12 மாநிலங்களைக் கடந்து 150 நாள் பயணமாக இந்த பாத யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.

  கன்னியாகுமரியில் இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு மாலை 3 மணிக்கு பாதயாத்திரை தொடக்க விழா நடக்கிறது.

  இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அவர் ராகுல் காந்தியிடம், தேசிய கொடியை வழங்கி பாத யாத்திரையை தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி அங்கு நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு நடந்து செல்கிறார். கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

  இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது பாத யாத்திரையை மட்டும் தொடங்கி வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

  குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் 56 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி, 11-ந் தேதி காலையில் திருவனந்தபுரம் சென்றடைகிறார். இதைத்தொடர்ந்து கேரளாவில் 18 நாட்கள் பாதயாத்திரை செல்கிறார். தினமும் ராகுல் காந்தி 20 முதல் 25 கிலோ மீட்டர் தூரம் நடக்க திட்டமிட்டு உள்ளார்.

  ராகுல் காந்தி பாத யாத்திரை தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் கன்னியாகுமரியில் வேகமாக செய்யப்பட்டு வருகிறது. காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் இங்கேயே முகாமிட்டு அதற்கான பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

  எம்.பி.க்கள் விஜய் வசந்த், செல்லகுமார், ஜெயக்குமார் ஜோதிமணி,எ ம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார் பிரின்ஸ் மற்றும் மேலிட பார்வையாளர்களும் இங்குள்ள நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

  ராகுல் காந்தியை வரவேற்க மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். சாலையின் இருபுறமும் தொண்டர்கள் பொதுமக்கள் ராகுல் காந்தியை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

  கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ராகுல் காந்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

  Next Story
  ×