என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் 4 டன் காய்கறிகள் வீணாக குப்பையில் வீச்சு- வியாபாரிகள் கவலை
  X

  கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் 4 டன் காய்கறிகள் வீணாக குப்பையில் வீச்சு- வியாபாரிகள் கவலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 2 நாட்களாகவே சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.
  • விற்பனை ஆகாமல் தேக்கமடைந்து வீணாகும் 4 முதல் 5 டன் அளவிலான காய்கறிகள் குப்பையில் கொட்டப்பட்டு வருவதால் மொத்த வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளது.

  போரூர்:

  கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து இன்று 450 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.

  கடந்த 2 நாட்களாகவே சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக மார்க்கெட் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. விற்பனை ஆகாமல் தேக்கமடைந்து வீணாகும் 4 முதல் 5 டன் அளவிலான காய்கறிகள் குப்பையில் கொட்டப்பட்டு வருவதால் மொத்த வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளது.

  இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.12-க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் அதை வாங்கி செல்ல சந்தைக்கு இன்று சில்லரை வியாபாரிகள் அதிகளவில் வரவில்லை.

  குறிப்பாக தக்காளி, கத்தரிக்காய், அவரைக்காய், வெள்ளரிக்காய், சவ்சவ், முள்ளங்கி, நூக்கல் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்து வீணாகி வருவதை மொத்த வியாபாரிகள் தினசரி குப்பையில் கொட்டி வருகின்றனர்.

  இது குறித்து மொத்த வியாபாரி சுகுமார் கூறும்போது:-

  காய்கறி வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் தக்காளி, அவரை, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. எனினும் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறைந்து விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

  இதன் காரணமாகவே தேக்கமடைந்து வீணாகி வரும் காய்கறிகளை குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டு உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இன்றைய காய்கறி மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்)

  தக்காளி-ரூ.10,

  நாசிக் வெங்காயம்-ரூ.21,

  ஆந்திரா வெங்காயம்-ரூ.12,

  சின்ன வெங்காயம்-ரூ.30,

  உருளைக்கிழங்கு-ரூ.30,

  உஜாலா கத்தரிக்காய்-ரூ.25,

  வரி கத்தரிக்காய்-ரூ.15,

  அவரைக்காய்-ரூ.12,

  வெண்டைக்காய்-ரூ.10,

  பீன்ஸ்-ரூ.50,

  ஊட்டி கேரட்-ரூ.30,

  பீட்ரூட்-ரூ15,

  முள்ளங்கி-ரூ10,

  நூக்கல்-ரூ.15,

  சவ்சவ்-ரூ.15,

  முருங்கைக்காய்-ரூ.20,

  கோவக்காய்-ரூ.15,

  மலபார் வெள்ளரி-ரூ.5,

  பன்னீர் பாகற்காய்-ரூ.30,

  முட்டை கோஸ்-ரூ.14,

  காலி பிளவர் ஒன்று-ரூ.18,

  குடை மிளகாய்-ரூ.60,

  பீர்க்கங்காய்-ரூ.40,

  சுரக்காய்-ரூ.10,

  வெள்ளரிக்காய்-ரூ.10.

  Next Story
  ×