என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திண்டுக்கல் அருகே கடமான் வேட்டையாடிய 2 பேர் கைது
  X

  திண்டுக்கல் அருகே கடமான் வேட்டையாடிய 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மான்வேட்டையாடி இறைச்சியை எங்கு கொண்டு செல்கின்றனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  குள்ளனம்பட்டி:

  திண்டுக்கல் அருகே வனப்பகுதியில் கடமான் வேட்டையாடப்படுவதாக மாவட்ட வனஅலுவலர் பிரபுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி வனச்சரகர் மதிவாணன் தலைமையில் வனவர் அப்துல்ரகுமான், வனக்காப்பாளர்கள் சண்முகவேல், கணேஷ்குமார், புகழ்கண்ணன், வனக்காவலர் சோமு அடங்கிய குழுவினர் செட்டியபட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.

  அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அதில் ரத்தக்கறை இருந்தது. இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

  விசாரணையில் பைக்கில் வந்தவர்கள் வெள்ளோடு சவரிமுத்து(46), பெருமாள்கோவில்பட்டி இருளப்பன்(32) என்பதும், கடமான் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 7 கிலோ மான்இறைச்சி, மான்தோல், தலை, ரெட்டைகுழல் துப்பாக்கி மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

  இவர்கள் வேறு ஏதேனும் வேட்டையில் ஈடுபட்டார்களா, மான்வேட்டையாடி இறைச்சியை எங்கு கொண்டு செல்கின்றனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×