search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்தியாவிலேயே முதன்முதலாக வரி வருவாய் வசூலிக்க உத்தரவிட்ட இடம் ஓமலூர் வி.ஏ.ஓ.சங்க விழாவில் தாசில்தார் தகவல்
    X

    மேட்டூர் சப்-கலெக்டர் வீர்பிரதாப்சிங் பேசிய காட்சி.

    இந்தியாவிலேயே முதன்முதலாக வரி வருவாய் வசூலிக்க உத்தரவிட்ட இடம் ஓமலூர் வி.ஏ.ஓ.சங்க விழாவில் தாசில்தார் தகவல்

    • புதுபிக்கப்பட்ட கட்டிடத்தை மேட்டூர் சப்-கலெக்டர் வீர்பிரதாப்சிங் திறந்து வைத்தார்.
    • கோட்டாட்சியர் அலுவலகம் ஓமலூரை தலைமையிடமாக கொண்டே செயல்பட்டது.

    ஓமலூர்:

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் ஓமலூர் வட்டகிளை கட்டிட திறப்புவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதுபிக்கப்பட்ட கட்டிடத்தை மேட்டூர் சப்-கலெக்டர் வீர்பிரதாப்சிங் திறந்து வைத்தார். காடையாம்பட்டி தாசில்தார் அருள்பிரகாஷ் பேசுகையில் சேலம் மாவட்டத்தில் முதல் கோட்டாட்சியர் அலுவலகம் ஓமலூரை தலைமையிடமாக கொண்டே செயல்பட்டது. இங்கிருந்து சேலம் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் வரை ஆட்சி நிர்வாகம் செய்யப்பட்டது. இந்தியாவில் முதன் முதலாக வரி வருவாய் பெறுவதற்கான விதை அப்போதைய சப்-கலெக்டர் சர் தாமசால் திட்டம் தீட்டப்பட்டு வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து குத்துவிளக்கேற்றி சங்கத்தின் செயல்பாடுகள் தொடங்கப்பட்டது. கட்டிடத்தில் கல்வெட்டை சப்-கலெக்டர் வீர் பிரதாப் சிங் திறந்து வைத்தார். பின்னர் கிராம உதவியாளர்கள் சங்கமும், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கமும் தொடங்கி வைக்கப்பட்டது.

    Next Story
    ×