search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    73 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆய்வு
    X

    நெல் கொள்முதல் நிலையம் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    73 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆய்வு

    • பல்வேறு சோதனை சாவடிகள் மற்றும் மாவட்ட எல்லைகளிலும் கடந்த மூன்று நாட்களாக தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
    • 36 -க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி அரவை ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    நுகர்பொருள் வாணிப கழகத்தின் வாயிலாக விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு அங்கிருந்து அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு ரேஷன் அரிசி அரவை செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விவசாயி களிடம் நெல்லை நேரடி கொள்முதல் செய்வதில், வெளி மாவட்டங்களில் இருந்து ஏதேனும் இடைத் தரகர்கள் வாயிலாக உரிய ஆவணங்கள் இல்லாமல் நெல் மூட்டைகள்எடுத்து வருவதையும், அரிசி ஆலைகளில் முறைகே டுகள் நடைபெ றாமல் கண்காணிக்கவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் காவல் துறை இயக்குநர் ஆபாஸ்குமார் மேற்பார்வையில், திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர்சுஜாதா, காவல் துணைக்க ண்காணிப்பாள ர்கள் மற்றும் இதர காவல் அலுவலர்களுடன் சேர்ந்து திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய 9 மாவட்டங்களிலும் ரேஷன் அரிசி அரவை செய்யும் ஆலைகள் மற்றும் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களுக்கு லாரிகளில் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் உரிய ஆவணங்களுடன் வருகிறதா என பல்வேறு சோதனைச் சாவடிகள் மற்றும் மாவட்ட எல்லைகளிலும் கடந்த மூன்று நாட்களாக தீவிர வாகன சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    திருச்சி மண்டலத்தில் இதுவரை நடந்த தீவிர வாகன சோதனையில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் எந்த ஆவணங்களும் இல்லாமல் சுமார் 29 டன் நெல் ஏற்றி வரப்பட்ட 2 லாரிகளை பிடித்து நுகர் பொருள் வாணிப கழக துணை மேலாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் 43 டன் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த 3 லாரிகளை பிடித்து லாரி ஓட்டுநர்களிடம் தீவிர விசாரணை செய்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல் கருர் மாவட்டம் குளித்தலை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார்1.05 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை திருச்சி மண்டலத்தில் 73 நேரடி நெல் கொள்முதல் மையங்கள் மற்றும் 36 -க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி அரவை ஆலைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் இதனைத் தொடர்ந்து காவல்துறை இயக்குநர் ஆபாஸ்குமார் தஞ்சாவூர் சரகம், மருங்குளத்தில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும், மருங்குளத்தில் உள்ள நவீன அரிசி ஆலையையும், நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர்சுஜாதா, திருச்சி மற்றும் தஞ்சாவூர் சரக காவல் துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், தஞ்சாவூர் உட்கோட்ட தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக துணை மேலாளர் முத்தையா மற்றும் தஞ்சாவூர் கொள்முதல் அதிகாரி எழில் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×