search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு மானிய விலையில் இடு பொருட்கள்
    X

    கோப்புபடம்

    விவசாயிகளுக்கு மானிய விலையில் இடு பொருட்கள்

    • தோட்டக்கலைத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
    • தோட்டக்கலைத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    மடத்துக்குளம்

    மடத்துக்குளம் வட்டாரத்தில் 2020-21ம் ஆண்டில் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்துங்காவி கிராமம் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில்தோட்டக்கலைத்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட 125 விவசாயிகளுக்கு பல்வேறு ரக விதைகள் கொண்ட தொகுப்பு வழங்கப்படுகிறது.பயிர் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் துங்காவியில் நடந்த விழாவில் தலா 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன.தற்போது பண்ணை குறைபாடு களைதல் திட்டத்தின் கீழ் 20 விவசாயிகளுக்கு, பிளாஸ்டிக் டிரம், பிளாஸ்டிக் அறுவடை பெட்டி உள்ளிட்ட தொகுப்பு தலா 20 ஆயிரம் ரூபாய் மானியத்தில் வழங்கப்பட்டது.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா, அலுவலர் காவ்யதீப்தினி உள்ளிட்டோர் விவசாயிகளுக்கு வழங்கினர்.

    தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: -

    அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்வயல்களின் வரப்பு ஓரங்களில், தோட்டத்தின் எல்லை பகுதிகளில் நடவு செய்யும் வகையில் சீதா, எலுமிச்சை, கொய்யா, நாவல், கொடுக்காப்புளி, நெல்லி, முருங்கை, தேக்கு போன்ற 8வகையான பழம், பயன்தரும் மரக்கன்றுகள், தோட்டக்கலைத்துறை சார்பில் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள், சிட்டா, ரேஷன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 ஆகிய ஆவணங்களுடன்மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×