என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தேனி மாவட்டத்தில் நாளை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்து தேர்வு
  X

  கோப்பு படம்

  தேனி மாவட்டத்தில் நாளை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்து தேர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி மாவட்டத்தில் நாளை (25-ந் தேதி) நேரடி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்து தேர்வுக்கு நடைபெறுகிறது.
  • தேர்வு பணியில் ஈடுபட உள்ள இன்ஸ்பெக்டர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது.

  தேனி:

  தேனி மாவட்டத்தில் நாளை (25-ந் தேதி) நடைபெற உள்ள நேரடி சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்து தேர்வுக்கு முன்னேற்பாடுகள் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் நடைபெற்றது.

  கூட்டத்தில் ஏ.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எழுத்து தேர்வு பணியில் ஈடுபட உள்ள இன்ஸ்பெக்டர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது.

  எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு நுழைவுச்சீட்டு மற்றும் அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையுடன் காலை 8.30 மணிக்கு வர வேண்டும். தேர்வு 10 மணிக்கு தொடங்கி நடைபெறும். அதன் பிறகு வரும் தேர்வாளர்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட–மாட்டார்கள்.

  தேர்வுக்குரிய ஹால்டிக்கெட், அடையாள அட்டை, நீலம் அல்லது கருப்பு நிற பந்து முைன பேனாவைத் தவிர வேறு பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவை மையத்தின் நுழைவு வாயிலிலேயே அகற்றப்படும்.

  குறிப்பிட்ட நேரத்துக்குள் அவரவருக்கான தேர்வு மையத்தில் ஆஜராகி தேர்வு மைய கட்டிடம் மற்றும் இருக்கைகளை கவனமாக கண்டறிந்து குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Next Story
  ×