search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வு:  சேலம் மாவட்டத்தில் 1,756 பேர் பங்கேற்கவில்லை
    X

    சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வு: சேலம் மாவட்டத்தில் 1,756 பேர் பங்கேற்கவில்லை

    • சேலம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வு 1,756 பேர் பங்கேற்கவில்லை.
    • தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் பங்கேற்க லட்சக்கணக்கில் பட்டதாரி இளைஞர்கள், இளம்பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதன்மை எழுத்துத்தேர்வும், தமிழ் தகுதி தேர்வும் நேற்று மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது.

    இதில் சேலம் மாவட்டத்தில் 8 மையங்களில் நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 8,747 பேர் எழுதினர். இது 83.3 சதவீதமாகும். தேர்வுக்கு 1,756 பேர் வரவில்லை.

    1,968 பெண்களில் 1,685 பேர் தேர்வு எழுதினர். 283 ெபண்கள் தேர்வுக்கு வரவில்லை. லஞ்ச ஒழிப்பு டி.ஐ.ஜி. லட்சுமி மேற்பார்வையில் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், மாநகர துணை கமிஷனர் லாவண்யா தலைமையில் தேர்வு நடத்தப்பட்டது.

    2-வது நாள்

    2-வது நாளான இன்று (26-ந்தேதி) காவல் துறையை சார்ந்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு நடக்கிறது. துறையை சேர்ந்தவர்களுக்கான இந்த தேர்வில் 2-ம் நிலை காவலர், முதல் நிலை காவலர், தலைமை காவலர் உள்ளிட்ட போலீசாரும், காவல் துறையில் போலீஸ் அல்லாத சார்பு அணி பணியாளர்களும் பங்கேற்று எழுதினர்.

    இதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் காவல் துறையை சேர்ந்த பலர் பங்கேற்று சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதினர். சூப்பர் சோதனை அதிகாரிகளான போலீஸ் கமிஷனர், மற்றும் டி.ஐ.ஜி.க்கள் தேர்வு மையங்களில் ஆய்வு செய்தனர்.

    தேர்வு மையங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    Next Story
    ×