search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் சதுரங்க வடிவில் நின்று மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடந்த மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    தஞ்சையில் சதுரங்க வடிவில் நின்று மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
    • செஸ் விளையாட்டு போட்டியை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    தஞ்சாவூர்:

    இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகள் 28.7.202 முதல் 10.8.2022 வரை செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் ச நடைபெற உள்ளது.

    இதில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவு படி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில்இ ந்த செஸ் விளையாட்டுப் போட்டியை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள 1376 பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தஞ்சாவூர் பிரிவு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.இதில் சதுரங்க வடிவில் மாணவ-மாணவியர்கள் நின்று கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் , மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி, மாவட்ட விளையாட்டு பயிற்றுநர்கள், மாணவ -மாணவியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×