என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பரமத்தி வேலூர் பகுதிகளில் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
  X

  நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகர், பரமேஸ்வரி ஆலயத்தில் உள்ள விநாயகர், பரமத்திவேலூர் ஹேரம்ப பஞ்சமுக விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.

  பரமத்தி வேலூர் பகுதிகளில் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரமத்தி வேலூர் பகுதிகளில் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனையும் நடந்தது.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை ஹேரம்ப பஞ்சமுக விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பஞ்சமுக விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

  இதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து பஞ்சமுக விநாயகர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

  இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பஞ்சமுக விநாயகரை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

  இதேபோல் கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகர், திருவேலீஸ்வரர் கோவிலிலுள்ள விநாயகர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

  இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

  Next Story
  ×