என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சாய்பாபாவுக்கு நவதானிய அலங்காரத்தில் சிறப்பு பூஜை
  X

  வீரணம்பாளையத்தில் ஸ்ரீ சீரடி முக்கண் சாய்பாபா முதல் முறையாக நவதானிய அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

  சாய்பாபாவுக்கு நவதானிய அலங்காரத்தில் சிறப்பு பூஜை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பரமத்திவேலூர் தாலுகா வீரணம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சீரடி முக்கண் சாய்பாபாவிற்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
  • இதில் 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

  பரமத்திவேலூர்:

  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வீரணம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சீரடி முக்கண் சாய்பாபாவிற்கு பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் முதல் முறையாக நவதானிய அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த நாமக்கல், பரமத்தி, பரமத்திவேலூர், பொத்தனூர், கீரம்பூர், வள்ளிபுரம், போதுப்பட்டி, கந்தம்பாளையம், கொசவம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அதிகாலை முதலே வந்து தரிசனம் செய்தனர். மேலும் சாய்பாபாவிற்கு பக்தர்கள் நேர்த்தி கடனாக பிஸ்கட், நாட்டு வெல்லம், எண்ணெய், மற்றும் பூக்கள், தேங்காய் கொண்டு வந்து செலுத்தினர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

  Next Story
  ×