என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் திட்டப்பணிகளை சிறப்பு அதிகாரி ஆய்வு
  X

  வேளாண் திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.

  நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் திட்டப்பணிகளை சிறப்பு அதிகாரி ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தரிசு நிலத்தொகுப்பு குறித்து திருச்செங்கோடு, நாமக்கல், பரமத்தி, கபிலர்மலை ஆகிய வட்டாரங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்.
  • நுண்ணீர் பாசனம், மழை நீரை சேமித்தல் போன்றவைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

  பரமத்தி வேலூர்:

  தமிழ்நாடு விவசாய நிலங்களில் பசுமை போர்வை இயக்கம் திட்டத்தின் கீழ் திருச்செங்கோடு வட்டாரத்தில் மோடமங்கலம் அக்ரஹாரம், அத்திமரத்தூர், எலச்சிப்பாளையம் வட்டாரத்தில் உஞ்சனை, நாமக்கல் வட்டாரத்தில் எர்ணாபுரம் ஆகிய கிராமங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இவற்றை குடுமியான்மலை சமிதி-ஸ்டாமின் இயக்குநர், சங்கரலிங்கம் ஆய்வு செய்தார்.

  தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை, டான்சிடா விதைப்பண்ணை திட்டத்தின் கீழ் எலச்சிப்பாளையம் வட்டாரத்தில் மாவுரெட்டிப்பட்டி கிராமத்தில் பாசிபயறு, நிலக்கடலை விதைப் பண்ணைகளையும், புதுச்சத்திரம் வட்டாத்தில் ச.உடுப்பம், பரமத்தி வட்டாரத்தில் மேல்சாத்தம்பூர், கபிலர் மலை வட்டாரத்தில் பெருங்குறிச்சி ஆகிய கிராமங்களில் உள்ள நிலக்கடலை மற்றும் உளுந்து விதைப்பண்ணைகளையும் ஆய்வு செய்தார்.

  2022-23 ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தரிசு நிலத்தொகுப்பு குறித்து திருச்செங்கோடு, நாமக்கல், பரமத்தி, கபிலர்மலை ஆகிய வட்டாரங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

  ஆய்வின் போது விவசாயிகளுக்கு கோடைஉழவு, சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவது, விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்ட உரங்கள் பயன்படுத்துதல், பயறு வகை பயிர்களுக்கு டி.ஏ.பி கரைசல் தெளிப்பு,பருவத்திற்கேற்ற பயிர் சுழற்சி, ஊற்றமேற்றிய தொழு உரமிடுதல், உயிர் உரங்களை பயன்படுத்துதல், நுண்ணீர் பாசனம், மழை நீரை சேமித்தல் போன்றவைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

  திருச்செங்கோடு வட்டாரம், புதுச்சத்திரம் வட்டாரம் புதன்சந்தை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஆய்வு செய்து பயிர் சாகுபடி பரப்பு பதிவேடுகள் பராமரித்தல், கிடங்க இருப்பு பதிவேடுகள், விதை முளைப்புத்திறன் பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் எலச்சிபாளையம் வட்டாரத்தில் வேலகவுண்டம்பட்டியில் புதியதாக கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

  இந்த ஆய்வின் போது நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோகன், வேளாண்மை துணை இயக்குநர்கள் ஜெகதீசன் (மத்தியத்திட்டம்) ராஜகோபால் (மாநிலத்திட்டம்) ஆகியோர் உடனிருந்தனர். அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள், துணைவேளாண்மை அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்து ஆய்விற்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

  Next Story
  ×