search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிகடன் பெற சிறப்பு முகாம்
    X

    கோப்பு படம்

    தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிகடன் பெற சிறப்பு முகாம்

    • மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • மாற்றுத்திறனாளிகள் தேவையான ஆவணங்களுடன் வந்து விண்ணப்பித்து பயனடையலாம்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட, சுயதொழில் புரிவதை ஊக்குவிக்கும் நோக்கில் வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டம், ஆவின் பாலகம் அமைக்கும் திட்டம், மாவட்ட தொழில் மையம் மூலம் பாரத பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலம் மத்திய அரசின் திட்டம், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டங்களில் பயன்பெற வருகிற 5-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தொடர்புடைய துறைகளை ஒருங்கிணைத்து மாற்றுத்திறனாளி–களுக்கான பிரத்யோக லோன் மேளா மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

    இந்த வங்கிகடன் மேளாவில் புதிதாக வங்கிகடன் மற்றும் வங்கியில் கடன் நிலுவை இல்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி–களுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் 2, தொழில் தொடர்பான திட்ட அறிக்கை மற்றும் இதர தேவையான ஆவணங்களுடன் வந்து விண்ணப்பித்து பயனடையலாம்.

    Next Story
    ×