என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
தொடர்ந்து முகூர்த்த நாட்கள் என்பதால் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
- பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது.
- விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், பெரியம்பட்டி, அகிலம், கோவிலூர், திண்டல், பேகாரஹள்ளி, பைசுஹள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் அதிக அளவில் பூக்கள் சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பூக்களின் விலை குறைந்து இருந்தது. தற்போது பூக்களின் விலை உயர்ந்து வருகிறது.
சன்னமல்லி, கனகாம்பரம் பூக்கள் ரூ.500-க்கும், குண்டுமல்லி ரூ.600-க்கும், சாமந்திப்பூ, பன்னீர் ரோஸ் , அரளி ஆகியவை ரூ.100-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும் விற்பனையாகிறது.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் நடப்பதாலும், முகூர்த்த நாட்கள் வருவதாலும் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து விவசாயி கூறுகையில், கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் எல்லா கோவில்களில் திருவிழா, கொடை விழா போன்ற வற்றை நடத்தி வரு கின்றனர்.
மேலும் தற்போது இந்த மாதம் முகூர்த்த நாட்கள் அதிகம் இருப்பதால் பூக்கள் தேவை அதிக ரித்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் தற்போது பூக்களின் விலை கிடு கிடு வென உயர்ந்து உள்ளது என்றார்.