என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தேனி மாவட்டத்தில் 7 வாக்குச் சாவடிகள் இடமாற்றம்
  X

  கோப்பு படம்

  தேனி மாவட்டத்தில் 7 வாக்குச் சாவடிகள் இடமாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாக்கு ச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிக ளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
  • தேனி மாவட்டத்தில் 7 வாக்குச் சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

  தேனி:

  தேனி மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் வாக்கு ச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிக ளுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் முரளிதரன் பேசியது, மாவட்டத்திலுள்ள 4 சட்டப் பேரவை தொகுதியி லும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குச்சாவ டிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

  ஆண்டிப்பட்டி சட்டப்பே ரவை தொகுதிக்கு உட்பட்ட காமயக்கவுண்னடன் பட்டியில் விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் 6 வாக்குச்சாவடிகள் இயங்கி வந்தன. தற்போது இப்பள்ளி செயல்படாததால், அதே ஊரில் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளிக்கு 3 வாக்குச்சாவடிகளும், அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 3 வாக்குச்சாவடிகளும் இடமாற்றம் செய்யப்பட்டு ள்ளன.

  கம்பம் தொகுதிக்கு உட்பட்ட கம்பம் நகராட்சி மெயின் தொடக்கப்பள்ளி யில் இயங்கி வந்த ஒரு வாக்குச் சாவடி, அங்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலம் செயல்பட்டு வருவதால் அங்கே உள்ள ஆங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது.

  போடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட முதுவாக்குடி மலை கிராம மக்கள் அங்கிருந்து 5 கி.மீ. தூரமுள்ள சென்ட்ரல் ஸ்டேஷன் வாக்குச் சாவ டிக்கு சென்று வாக்களிக்க வேண்டியதுள்ளதால், முதுவாக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் புதிதாக வாக்குச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

  Next Story
  ×