என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வடக்கு பச்சையாறு அணையில் இருந்து விடுபட்ட 46 குளங்களுக்கு தனிக்கால்வாய் விரைவாக அமைத்து தர வேண்டும் - அமைச்சரிடம், நாங்குநேரி யூனியன் தலைவர் கோரிக்கை
  X

  வடக்கு பச்சையாறு அணையில் இருந்து விடுபட்ட 46 குளங்களுக்கு தனிக்கால்வாய் விரைவாக அமைத்து தர வேண்டும் - அமைச்சரிடம், நாங்குநேரி யூனியன் தலைவர் கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தனிக்கால்வாய் அமைத்து மேற்கண்ட குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டால் சுமார் 75 ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும்.
  • நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு அரசின் சார்பில் 46 குளங்களுக்கும் தண்ணீர் செல்லும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  நெல்லை:

  நெல்லை மாவட்டத்திற்கு ஆய்வு பணிகளுக்காக வந்த அமைச்சர் துரைமுருகனை, நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா எட்வின் சார்பில் அவரது கணவர் நாங்குநேரி ஒன்றிய கவுன்சிலரும், தி.மு.க. ஒன்றிய செயலாளருமான ஆரோக்கிய எட்வின் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

  வடக்கு பச்சையாறு அணையில் இருந்து நாங்குநேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் 46 குளங்களுக்கு தனிக்கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

  எவ்வளவு மழை பெய்தாலும், தண்ணீர் செழிப்பாக இருந்தாலும், தனிக்கால்வாய் இல்லாததால் மேற்கண்ட 46 குளங்களும் வருடம் முழுவதும் வறண்டு காணப்படுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது.

  தனிக்கால்வாய் அமைத்து மேற்கண்ட குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டால் சுமார் 75 ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும். நான் நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு அரசின் சார்பில் 46 குளங்களுக்கும் தண்ணீர் செல்லும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  எனவே விவசாயிகளின் நலன் கருதி நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், ஆய்வு செய்து திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதாக தெரிவித்தார்.

  Next Story
  ×