என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாவூர்சத்திரத்தில் வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு
  X

  பாவூர்சத்திரத்தில் வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முத்து சாரதி மற்றும் சுரேசை அருகில் இருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
  • சுரேசின் உறவினர் ஒருவரை கனி பாண்டியின் நண்பர்கள் சிலர் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

  தென்காசி:

  பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூரில் நேற்றிரவு அந்த பகுதியை சேர்ந்த சிலர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  அரிவாள் வெட்டு

  உடனே மேலப்பாவூர் வடக்கு தெருவை சேர்ந்த சாமிதுரை என்பவரது மகன் முத்து சாரதி(வயது 18), சுரேஷ்(38) ஆகிய 2 பேரும் அவர்களை சமாதானப்படுத்த சென்றுள்ளனர். அப்போது மேலப்பாவூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சொள்ளமுத்து(62), கனி பாண்டி(28) ஆகியோர் முத்து சாரதி மற்றும் சுரேசை தலை மற்றும் கைகளில் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

  உடனே 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  அவர்களது புகாரின்பேரில் பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு சுரேசின் உறவினர் ஒருவரை கனி பாண்டியின் நண்பர்கள் சிலர் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

  இதன் காரணமாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த அரிவாள் வெட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அப்பகுதி முழுவதும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  Next Story
  ×