search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில்  பள்ளி மாணவ, மாணவிகளுக்கான   மாவட்ட அளவிலான செஸ் போட்டி
    X

    சேலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி

    • சேலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன.
    • மாணவ- மாணவிகளும் இப்போட்டியில் பங்கேற்க–லாம் என்று மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சேலம்:

    சென்னை மகாபலிபுரத்தில் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதற்காக 100 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பார்வையிடுவதற்காக தமிழகம் முழுவதும் இளம் வீரர் வீராங்கனைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி சேலம் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் வருகிற 25,26 ஆகிய தேதிகளில் சேலம் உடையாப்பட்டி நோட்டரி டாம் ஹோலிகிராஸ் பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    25-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்க உள்ளன 9 சுற்றுகளின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறவுள்ளன. 15 வயதிற்கு உட்பட்டோருக்கு மட்டும் போட்டிகள் நடைபெற உள்ளன. மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளும் இப்போட்டியில் பங்கேற்கலாம் என்று மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இப்போட்டிகளில் வெற்றி பெறும் இளம் வீரர் வீராங்கனைகளுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. மேலும் முதலிடம் பெறும் வீரர், வீராங்கனை, மகாபலிபுரத்தில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளை நேரில் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நட்சத்திர விடுதிகளில் தங்கும் இடம், உணவு, மற்றும் பயணச் செலவுகள் சதுரங்க கழகத்தின் சார்பில் செய்யப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இது தொடர்பான போட்டி அட்டவணை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பட்டுள்ளது.

    Next Story
    ×