search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு உதவித்தொகை
    X

    கோப்பு படம்

    தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு உதவித்தொகை

    • ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத்திற னாளி இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவி த்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • மேலும் விபரங்களுக்கு தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொண்டும் விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொண்டு, பயனடையுமாறு தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் ஓராண்டுக்கு மேலாக காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற அனைத்து வகை மாற்றுத்திற னாளி இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவி த்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழான தகுதிவரை பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.600 வீதமும், மேல்நிலைக் கல்வித்தகுதி பதிவு செய்தவர்களுக்கு ரூ.750 வீதமும், பட்டடதாரி கல்வித்தகுதி பதிவு செய்தவர்களுக்கு ரூ.1000 வீதமும் ( பி.இ., போன்ற தொழில்சார் பட்டப்படிப்பு கள் தவிர) காலாண்டுதோறும் நேரடியாக பயனாளிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    தமிழக அரசின் ஆணை ப்படி, மாற்றுத்திறனாளி பயனாளிகள் பயன்பெறும் வகையில் காலாண்டிற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை தற்போது 2021-22 ஆம் நிதியாண்டு முதல் தொடர்ந்து மாதந்தோறும் பயனாளிகளின் வங்கி க்கணக்கில் வரவு வைக்க ப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகைப்பெற விரும்பும் மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் கீழ்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

    வருமான உச்ச வரம்பு கிடையாது. பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் இந்த உதவித்தொகை பெற தகுதியில்லை. அரசின் வேறு உதவித்தொகை எதுவும் பெறுதல் கூடாது.

    அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ-மாணவி களுக்கு இவ்வுதவித் தொகை வழங்கப்பட மாட்டாது.

    மேலும் விபரங்களுக்கு தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொண்டும் விண்ணப்பத்தினை இலவச மாக பெற்றுக் கொண்டு, பயனடையுமாறு தேனி மாவட்ட கலெக்டர் முரளி தரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×