என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மரக்கன்றுகள்- கலெக்டர் வழங்கினார்
  X

  மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

  'வீட்டுக்கு ஒரு விருட்சம்' திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மரக்கன்றுகள்- கலெக்டர் வழங்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
  • நடப்படும் மரக்கன்றுகள் நல்ல முறையில் பராமரித்து வளர்க்கும் பணியினை தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

  தஞ்சாவூர்:

  தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமை குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் சர்வதேச நீல வானம் தூய காற்று தினத்தை முன்னிட்டு வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்கொண்டார்.

  அப்போது அவர் தெரிவித்ததாவது:-

  தஞ்சாவூர் யாகப்பா நகர் பிஷப் தேவதாஸ் ஆம்ப்ரோஸ் பள்ளியில் (அன்னை வேளாங்கண்ணி கல்லூரி வளாகம்) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம் ,மாவட்ட பசுமை குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின்கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

  இதுவரை வரை கல்லூரி மற்றும் பொது இடங்களில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

  இத்திட்டத்தில் நடப்படும் மரக்கன்றுகள் நல்ல முறையில் பராமரித்து வளர்க்கும் பணியினை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

  அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் யாகப்பா நகர் பிஷப்தேவதாஸ் ஆம்ப்ரோஸ் பள்ளியில் கலெக்டர் தலைமையில் சர்வதேச நீல வானம், தூய காற்று தினத்தை முன்னிட்டு மாணவ -மாணவியர்கள் பசுமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

  இந்நிகழ்வில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற் பொறியாளர் விஜயப்பிரியா, கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர். ராதிகா மைக்கேல், இணைச் செயலாளர் பொறியாளர்முத்துக்குமார், பிஷப் பள்ளி தாளாளர் அருட்தந்தை வின்சென்ட் செபாஸ்டின், முதல்வர் சகோதரி பிரமிளா, கவின்மிகு தஞ்சை இயக்க உறுப்பினர்கள் செல்வராணி, கவிஞர் ராமதாஸ், தன்னார்வலர்கள் இளவரசன், பிரபாகர், ரவிக்குமார், குரு பிரசாத், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×