search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி வாலிபரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்தவருக்கு வலை
    X

    கோப்பு படம்

    தேனி வாலிபரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்தவருக்கு வலை

    • தேனி வாலிபரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்த நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்
    • மோசடி நபருக்கு சைபர் கிரைம் போலீசார் வலை

    தேனி:

    தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் கேட்டரிங் முடித்துவிட்டு அமெரிக்காவில் வேலை பார்த்தார். பின்னர் அவர் சொந்தஊர் திரும்பி உள்ளார். இவரது உறவினர் அஜீகண்ணனின் முகநூல் கணக்கை பயன்படுத்தினார். அதில் அமெரிக்காவை சேர்ந்த எமிலிஜோன்சுடன் பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது அவர் தான் அமெரிக்கராணு வத்தில் நர்சாக பணி புரிந்து வருவதாகவும், சிரியாவில் ராணுவ மீட்பு நடவடிக்கையின்போது கலவரகாரர்களிடம் இருந்து மிகப்பெரிய அளவில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இதில் தனது பங்கு தொகையாக ரூ.20 லட்சம் அமெரிக்கடாலர் கிடைக்கும் என கூறியுள்ளார்.

    அதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.15 கோடியே 81 லட்சத்து 80 ஆயிரமாகும். அந்த பணத்தை பத்திரமாக வைத்திருக்க நம்பிக்கையான நபர்கள் அமெரிக்காவில் இல்லை. எனவே இந்தியா அனுப்புவதாக முருகானந்தத்திடம் தெரி வித்துள்ளார்.

    அதற்காக முருகானந்த த்திற்கு 30 சதவீதம் கமிசன் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் டெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக மற்றொரு நபர் முருகானந்தத்தை தொடர்பு கொண்டு பார்சல் வந்துள்ளது. அதற்கு கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் செய்ய ரூ.8 லட்சத்து 64 ஆயிரத்து 790 வங்கி கணக்கில் செலுத்துங்கள் என கூறியுள்ளார்.

    மேலும் தொடர்ந்து பல தவணையாக ரூ.36 லட்சத்து ரூ.31 ஆயிரம் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. ஆனால் கூறியபடி பார்சல் பணம் அவருக்கு வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முருகானந்தம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அரங்க நாயகி, சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.




    Next Story
    ×