search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

    • பெண்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
    • யாதவர் தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    சாலை மறியல்

    நாங்குநேரி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டி ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர் கோசலை தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறி யலில் ஈடுபட்டனர்.

    அங்கிருந்த போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். பின்னர் அவர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    முனைஞ்சிப்பட்டி ஊராட்சி கீரன்குளத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குழா ய்கள் அமைத்து தெருக்களில் தண்ணீர் பிடித்து வந்தோம்.

    தற்போது புதிய திட்டத்தின் கீழ் எங்கள் பகுதியில் இருந்த குழாய்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் மோட்டார் பம்ப் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றனர். இதனால் எங்களுக்கு தண்ணீர் சரிவர கிடைப்பதில்லை. எனவே தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிரு ந்தனர்.

    சாக்கடை கழிவு நீர்

    மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அப்துல்காதர் கோயா தலைமையில் பொது மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மேலப்பாளையம் 50-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் கன்னிமார்குளம் அமைந்துள்ளது. இதனால் அப்பகுதிக்கு நிலத்தடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த குளத்தில் வார்டுக்கு உட்பட்ட 12 தெருக்களின் கழிவுநீர் கலக்கிறது. எனவே துர்நாற்றம் வீசி வருவதுடன் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் வசிக்க முடியவில்லை. எனவே கலெக்டர் சம்பவ இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தியாகராஜநகரை சேர்ந்த சமூகஆர்வலர் செல்வக்குமார் தலைமையில் பொதுமக்கள் கொடுத்த மனுவில், நெல்லை அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே எடுக்கும் போது அதற்கான முடிவுகள் உடனடியாக வழங்கப்படாமல் ஒரு வாரத்திற்கு பின்னர் கொடுக்கின்றனர். இதனால் நோயாளிகள் அடுத்தகட்ட சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே அது குறித்து நடவடிக்கை எடுத்து உடனடியாக முடிவுகள் வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    வீட்டு மனைப்பட்டா

    மாவீரன் சுந்தரலிங் கனார் மக்கள் இயக்க நிறுவனத்தலைவர் மாரியப்ப பாண்டியன் தலை மையில் ராமை யன்பட்டி பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வக்குமார், நிர்வாகி பாலமுருகன் உள்ளிட்டோர் கொடுத்த மனுவில், ராமையன்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட யாதவர் தெருவில் ஏராள மான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய இவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×