என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கால்பந்தை தலை, கால்களால் தட்டியபடி 300 மீட்டர் சென்று சாதனை
  X

  கால்பந்தை தலையால் தட்டியபடி வந்த குமரவேலு.

  கால்பந்தை தலை, கால்களால் தட்டியபடி 300 மீட்டர் சென்று சாதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து விழிப்புணர்வு நடத்தினர்.
  • சாதனை படைத்த குமரவேலுக்கு நகராட்சி சார்பில் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

  பட்டுக்கோட்டை:

  பட்டுக்கோட்டை அடுத்த அத்திவெட்டி பிச்சினிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேலு (48).

  கால்பந்து வீரரான இவர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று காலையில் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியிலிருந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரை சென்றுவர சுமார் 300 மீட்டர் தூரம் கால்பந்தை கீழே விழாமல் தலை மற்றும் கால்களால் தட்டிச் சென்று சாதனை படைத்தார்.

  பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா நிகழ்ச்சியை கொடியசைத்து துவங்கி வைக்க, ஆணையர் சௌந்தரராஜன் கால்பந்தை சாதனையாளர் குமாரவேலுவிடம் வழங்கினார். முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  மணிக்கூண்டு பகுதியில் சாலைகளில் ஸ்கேட்டிங் செய்து கொண்டே மாணவர்களும் மற்றும் நகராட்சித் தலைவர், ஆணையர், நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் படைசூழ சாதனையாளர் குமரவேலு கால்பந்தை கீழேவிழாமல் தலை மற்றும் கால்களால் தட்டிக் கொண்டே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரை சென்று மீண்டும் அங்கிருந்து மணிக்கூண்டு வரை 300 மீட்டர் தூரம் வந்தடைந்தார்.

  அதனைத் தொடர்ந்து சாதனை படைத்த குமரவேலுக்கு நகராட்சி சார்பில் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டதுடன் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

  Next Story
  ×