search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய்க்கு மீண்டும் தண்ணீர் திறப்பு
    X

    கோப்பு படம்

    வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய்க்கு மீண்டும் தண்ணீர் திறப்பு

    • தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளும் முழுகொள்ளளவை எட்டியுள்ளன.
    • விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 58-ம் கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளும் முழுகொள்ளளவை எட்டியுள்ளன.

    வைகை அணை நீர்மட்டம் 67 அடிக்குமேல் உயரும் போது 58-ம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்படும். இதன்மூலம் உசிலம்பட்டி, வட்டத்தில் 1912 ஏக்கர் நிலங்களும், நிலக்கோட்டை வட்டத்தில் 373 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 2285 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தபோது செப்டம்பர் 27-ந்தேதி 58-ம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    ஆனால் நீர்மட்டம் 2 வாரங்களிலேயே குறைந்ததால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு மேல் உள்ளது. இதனையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 58-ம் கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    விநாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் விவசாயிகள் 100 கனஅடி நீர் வர தாமதமாகும் என்பதால் கூடுதலாக 200 கனஅடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 70.47 அடியாக உள்ளது. வரத்து 1902 கனஅடி, திறப்பு 1319 கனஅடி, இருப்பு 5957 மி.கனஅடி.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 133.60 அடி, வரத்து 1604 கனஅடி, திறப்பு 511 கனஅடி, இருப்பு 5536 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்து 405 கனஅடி, திறப்பு 40 கனஅடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.20 அடி, வரத்து 201 கனஅடி, திறப்பு 30 கனஅடி.

    பெரியாறு 2, தேக்கடி 1.8, கூடலூர் 1.2, உத்தமபாளையம் 2.6, வீரபாண்டி 5.2, ஆண்டிபட்டி 3.2, போடி 4.2, சோத்துப்பாறை 5, பெரியகுளம் 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×