என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்:வாலிபர் கைது
  X

  இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்:வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • என்னை விட்டு வேறு யாரையாவது திருமணம் செய்தால் உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் ஓம்சக்திநகர் 7-வது தெருவை சேர்ந்தவர் சுந்தராஜன் (50).இவரது மகள் உமாபதி, செய்யது அம்மாள் மேல் நிலைப்பள்ளியில் 11-வது வகுப்பு 2019-2020 கல்வி ஆண்டில் படித்த போது, ராமநாதபுரம் இந்திரா நகர் அமரன் (20) காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்தார்.

  கடந்த 4-ந் தேதி உமாபதியும், அவரது சகோதரி உமாமகேஸ்வரியும் ஜவுளி கடைக்கு சென்று விட்டு வீட்டருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அமரன் உமாபதியை வழிமறித்து தகாத வார்த்தையால் பேசி கையை பிடித்து இழுத்தார். என்னை விட்டு வேறு யாரையாவது திருமணம் செய்தால் உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் தந்தை சுந்தராஜன் புகார் செய்தார்.

  சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் அமரனை கைது செய்தார்.

  Next Story
  ×