search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யனார் கோவிலை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    X

    அய்யனார் கோவிலை திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    • ராமநாதபுரம் அருகே அய்யனார் கோவிலை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் வலியுறுத்தினர்.
    • தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் அருகே தெற்கு தரவை கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் 120 குடும்பத்தினர் வசிக்கிறோம்.

    இங்கு அய்யனார் கோவில் கட்டி ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வருகிறோம். நிர்வாகியாக தெற்கு தரவை முனியன் மகன் மாணிக்கம் இருந்தார். கோவில் பூசாரியாக வள்ளிமாடன் வலசை முத்துவும், அவருக்கு பின் அவரது மகன் மலைச்சாமியும் பூஜை செய்து வந்தனர்.

    நிர்வாகியாக இருந்த மாணிக்கம் இறந்த பின் பசும்பொன் நகரை சேர்ந்த மங்களநாதன் என்பவருடன் சேர்ந்து எங்கள் கிராம மக்கள் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி கோவில் கும்பாபிேஷகம் நடத்தினோம். இந்த கும்பாபிேஷகத்திற்கு பின் மங்களநாதன் எங்கள் கிராம மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் கேட்டில் பூட்டு போட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடந்த மே 30-ந்தேதி ராமநாதபுரம் டி.எஸ்.பி., யிடம் மனு அளித்தோம். ஜூன் 4-ந்தேதி ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. அந்த சமாதான கூட்ட முடிவின் படி மங்களநாதன் நடக்கவில்லை.

    அதன் பின் மங்களநாதன் ஆர்.டி.ஓ. விடம் மனு அளித்ததன் பேரில் கடந்த 27-ந்தேதி சமாதான கூட்டம் நடந்தது. இதில் முடிவு ஏற்படாததால் ஆர்.டி.ஓ., உத்தரவுப்படி கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. தற்போது எங்கள் கிராமத்தில் முளைப்பாரி திருவிழா வருகிற செப்டம்பர் 6-ந்தேதி நடக்கிறது. அதில் அய்யனார் கோவிலில் கரகம் வைத்து தான் கரகம் கட்டி திருவிழா நடத்துவது வழக்கம்.

    தற்போது கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டதால் மக்கள் வேதனையில் உள்ளனர். எனவே, முளைப்பாரி திருவிழா நடத்த வசதியாக இதில் கலெக்டர் நடவடிக்கை எடுத்து கோவிலை திறக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×