search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் திரும்பும் போது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அலுவலர்கள், தொழிலாளர்கள் ஏராளமானோர் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் திரும்பும் போது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகைக்கு அவரவர் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். கடைசி நேர நெரிசலை தவிர்க்கும்வகையில் முன்பதிவு செய்யப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் பஸ் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் கட்டண கொள்ளை தொடருகிறது.

    தனியார் ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு முறைகே டாக வசூலிக்கப்படுகிறது. குடும்பத்தினருடன் சேர்ந்து பண்டிகை கொண்டாடும் ஆசையில் மக்களும் வேறு வழியின்றி அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்கின்றனர்.

    இதனை தவிர்க்க சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட த்திற்கு சென்னை, மதுரை, திருப்பூர், கோவையில் இருந்து தீபாவளிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சென்னையில் இருந்து 30 பஸ்கள், வருகிற 21, 22, 23-ந் தேதிகளில் கூடுதலாக இயக்கப்படுகிறது. மதுரை, கோவை, திருப்பூர் பகுதிகளில் இருந்து ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, ராமேசுவரத்திற்கு 20 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

    பயணிகள் கூட்டத்தை பொறுத்து அந்த வழித்தடங்களில் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

    மதுரை-ராமநாதபுரம் வழித்தடத்தில் வருகிற 23-ந் தேதி இரவு முழுவதும் பஸ் சேவை தொடரும். இதே போல் தீபாவளி முடிந்து மீண்டும் ஊருக்கு செல்பவர்களுக்கு வசதியாக 25-ந்தேதி கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. அனைத்து சிறப்பு பஸ்களிலும் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×