search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இஸ்லாமியா்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்
    X

    இஸ்லாமியா்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்

    • இஸ்லாமியா்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என த்வஹீத் ஜமாத் வலியுறுத்தியுள்ளனர்.
    • தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் தெற்கு பகுதி மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    ராமநாதபுரம்,

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் தெற்கு பகுதி மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநிலச் செயலா் நெல்லை செய்யது அலி தலைமை தாங்கினார். துணை பொதுச் செயலா் தஞ்சை முஜிபுர்ரஹ்மான் முன்னிலை வகித்தாா்.

    மாவட்டத்தலைவா் ஆரீப்கான் வரவேற்றாா். செயலா் தினாஜ்கான், பொருளாளா் ஷபிா், துணைத் தலைவா் அயூப்கான், துணைச் செயலா்கள் மஞ்சூா் கரீம்ஹக், யாசா், ராஜபுதீன், உஸ்மான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனா்.

    இதனைத் தொடா்ந்து மாநிலச் செயலா் நெல்லை செய்யது அலி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இஸ்லாமியா்களின் இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து பா.ஜனதா முன்னாள் நிா்வாகிகள் கூறிய சா்ச்சைக்குரிய கருத்துக்கள் கண்டனத்திற்குரியது.அவர்கள் மீது சாதாரண சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பேர் மீதும் பயங்கரவாத தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

    25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியா்களை நன்னடத்தை கருதி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட மனிதபிமான அடிப்படையிலான விடுதலை போன்று. அவர்களை விடு விக்க வேண்டும். இஸ்லாமியா்களுக்கு ஏற்கெனவே 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. இது போதுமானதாக இல்லை. எனவே விகிதச்சார அடிப்படையில் தமிழக அரசு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×