search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு
    X

    திறப்பு விழாவில் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு

    • முதுகுளத்தூரில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் திறப்பு விழா நடந்தது.
    • பேரூராட்சி தலைவர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை மற்றும் அதன் துணை துறைகள் சார்பில் ஒரே இடத்தில் இயங்குவதற்காக ரூ.2 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் சேமிப்பு கிடங்கு திறப்பு விழா நடந்தது.

    முன்னதாக தமிழக முதல்-அமைச்ச்ர மு.க.ஸ்டாலின் மாநிலத்தில் இது போல பல்வேறு மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்ட அலுவலகங்களை காணொலி வழியாக திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) கண்ணையா தலைமை தாங்கினார்.

    இதில் முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் அட்மா திட்டத்தின் தலைவர் பூபதிமணி, முதுகுளத்தூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் சண்முகம், மத்திய ஒன்றியச் செயலாளர் கோவிந்தராசு மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    கட்டிடத்தின் திட்டம் செயலாக்க அலுவலர் மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) குமரேசன், உதவி பொறியாளர் பீட்டர் சாண்டில்யன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் தலைமையில் வேளாண்மை துறை அலுவலா்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×