என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அஞ்சல் அட்டையில் 117 திருக்குறள் எழுதி சிறுவன் சாதனை
  X

  ராகுல்கவி

  அஞ்சல் அட்டையில் 117 திருக்குறள் எழுதி சிறுவன் சாதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அஞ்சல் அட்டையில் 117 திருக்குறள் எழுதி சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
  • சிறுவனின் இந்த முயற்சியை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரம் பள்ளி மாணவன் ஒருவன் நாணயம் சேகரிப்பு, ஸ்டாம்பு சேகரிப்பு, பேனாக்கள் சேகரிப்பு என்று சாதனை படைத்து வந்த நிலையில் தற்போது அஞ்சல் அட்டையில் 117 திருக்குறளை எழுதி புதிய சாதனை படைத்துள்ளான். விழிப்புணர்வு ராமநாதபுரம் அருகே உள்ளது புல்லங்குடி.

  இந்த ஊரைச் சேர்ந்தவர் முனியராஜ். இவர் விவசாயத்துடன் செங்கல் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். சிறுவயது முதலே பழங்கால நாணயங்கள் சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட முனியராஜ் ஏராளமான நாணயங்களை சேகரித்து வருகிறார். இது தவிர கவிதை எழுதுவதிலும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். இவரது மகன் ராகுல்கவி (வயது16) என்பவர் ராமநாத புரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

  இவரும் தனது தந்தையை போன்றே நாணயங்கள் சேகரிப்பு, பேனாக்கள் சேகரிப்பு போன்றவற்றில் ஆர்வமிக்கவ ராக இருந்து வருகிறார். ஆர்வம் இவர் தனது தந்தை சேகரித்து உள்ளதைவிட அதிகமாக நாணயங்களை சேகரித்து உள்ளார். இதுவரை 250-க்கும் மேற்பட்ட பழங்கால நாணயங்கள், 15 நாடுகளின் நாணயங்கள், சுதந்திரத்திற்கு முந்தைய மகாராணி நாணயம், முகலாய மன்னர் கால நாணயம், மன்னர்கள் பயன்படுத்திய கட்டை பேனா உள்பட 300-க்கும் மேற்பட்ட பழங்கால பேனாக்கள் என சேகரித்துள்ளார்.

  இதோடு நின்றுவிடாமல் ஸ்டாம்பு சேகரிப்பிலும் ஆர்வம் கொண்டு சேகரித்து வருகிறார். Also Read - 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக 6 லட்சம் சைக்கிள்கள் தயாரிக்கும் பணி தீவிரம் இதுதொடர்பான அரிய வகை புத்தகங்களையும் சேகரித்து தனது வீட்டில் 200-க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்டு மினி நூலகம் போன்று வைத்துள்ளனர்.

  சிறுவன் ராகுல்கவி கடந்த 2018-ம் ஆண்டு சென்னையில் நடந்த திருவள்ளுவர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்புவித்து பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார். சாதனை இதன் தொடர்ச்சியாக சிறுவன் ராகுல்கவி தற்போது அஞ்சல் அட்டையில் 117 திருக்குறளை எழுதி சாதனை படைத்துள்ளார்.

  இதுவரை யாரும் செய்யாத முயற்சியாக சிறுவன் திருக்குறளை மனப்பாடம் செய்து அதனை அஞ்சல் அட்டையில் சிறிய எழுத்துக்களில் 117 திருக்குறளை அதில் எழுதி உள்ளார். சிறுவனின் இந்த முயற்சியை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

  பல்வேறு சாதனைகளை சத்தமின்றி செய்து வரும் சிறுவன் ராகுல்கவி நன்றாக படித்து ஐ.ஏ.எஸ். ஆவதே தனது லட்சியம் என்று அடுத்த சாதனையை நிச்சயமாக சொல்லி அசத்தி வருகிறார்.

  Next Story
  ×