search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறந்த 20 கலைஞர்களுக்கு விருதுகள்
    X

    சிறந்த 20 கலைஞர்களுக்கு விருதுகள்

    • ராமநாதபுரம் மாவட்ட அளவில் சிறந்த 20 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • 5 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.


    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் ராமநாதபுரம் மாவட்டக்கலை மன்றத்தின் சார்பில் 2018-2019, 2021-2022-ம் ஆண்டுக்கு மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமை அடிப்படையில் சிறந்த 20 கலைஞர்கள் விருதுகள் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதுகளை தமிழ்நாட்டின் கலைப்பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கத்திலும், கலைஞர்களை சிறப்பிக்கும் வகையிலும் கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக 2002-2003-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் சிறந்த 5 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

    2018-2019, 2021- 2022-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்க ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் கடந்த 23-ந் தேதி நடந்த தேர்வுக்குழு கூட்டத்தில் பதவி வழி மற்றும் பதவி சாரா உறுப்பினர்கள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பரிசீலனை செய்தனர்.

    மாவட்ட அளவில் சிறந்த கலைஞர்களை வயது மற்றும் கலைப்புலமை அடிப்படையில் கீழ்க்காணும் கலைஞர்களை தேர்வு செய்தனர்.

    2018-19-ம் ஆண்டு விருதாளர்கள் 1.கலைஇளமணி-விஜய துர்கா, பரத நாட்டியம், 2.கலைவளர்மணி-ராஜேஸ்வரி, தேவாரம், 3.கலைச்சுடர்மணி- தமிழரசி, கைவினை, 4.கலைநன்மணி-துரைபாண்டி, வீதிநாடகம், 5.கலைமுதுமணி-முருகதாஸ், நாதஸ்வரம்.

    2021-22-ம் ஆண்டு விருதாளர்கள் 1.கலைஇளமணி-ஹரிணி, சிலம்பம் சிவானி அக் ஷதா, ஓவியம், அப்துல் பெரோஜ், சிலம்பம், 2.கலைவளர்மணி- மணிகண்டன், சிற்பம், மேத்யு இம்மானுவேல், சிலம்பம், ஹர்ஷிதா, வீணை, 3.கலைச்சுடர்மணி- செய்யது இப்ராஹீம், கைவினை, வசந்தகுமார், கிராமிய பாடகர், இளங்கோ, குரலிசை, 4.கலைநன்மணி- சாத்தன், ஜிம்ளாமேளம், கருணாகரன், நாடகம், நாகராஜ், ஒயிலாட்டம், 5.கலைமுதுமணி- மகாலிங்கம், தவில், பாலு, பம்பை, அர்சுனன் சிலம்பம்.

    மேற்கண்ட விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு ராமநா–தபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் கலெக்டர் விருதுக்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கி கவுரவிப்பார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×