search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய பஸ் நிலையத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை
    X

    பழைய பஸ் நிலையத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை

    • பழைய பஸ் நிலையத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர்மன்ற தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • ராமநாதபுரம் நகராட்சியின் சாதாரண கூட்டம், தலைவா் காா்மேகம் தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சியின் சாதாரண கூட்டம், தலைவா் காா்மேகம் தலைமையில் நடந்தது. இதில் 29 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீா்மானங்களை ஊழியா் இசக்கியம்மாள் வாசித்தாா்.

    தி.மு.க. உறுப்பினா் அய்யனாா் பேசுகையில், பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு இணைய தள ஒப்பந்தம் கோரல், பழைய பஸ் நிலையத்தில் பயன்பாடற்ற நிலையில் ரூ.35 லட்சத்துக்கு கழிப்பறை கட்டுவது, தனியாா் பள்ளிக்கு கழிப்பறை கட்டுவது குறித்து கேள்வி எழுப்பினாா்.

    நகராட்சி அலுவலா்கள் முறையாகப் பணிபுரிவதில்லை என்று பா.ஜ.க. உறுப்பினா் குமாா் குற்றம் சாட்டினார். சுகாதாரப் பணிகளுக்கு கூடுதலாக நிதி அளிக்கப்படுவதாக உறுப்பினா் ஜெயலட்சுமி உள்பட பலர் சுட்டிக்காட்டினா்.

    அதற்கு தலைவா் காா்மேகம் பதில் அளித்து பேசுகையில், பழைய பஸ் நிலையத்தில் சந்தை அமைக்க அதிகாரிகள் ஆலோசனை கூறினா். ஆனால் அது சரியல்ல. ராமநாதபுரத்தில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு டவுன் பஸ்களை பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தனியாா் பள்ளி மாணவா்களுக்கு கழிப்பறைகளை அமைத்துத் தருவது நகராட்சியின் கடமையாகும். நகராட்சி பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே நிதி ஒதுக்கப்படுகிறது என்றாா். நகா் பொறியாளா் சுரேந்தா் உள்பட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

    ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளராக இருந்த சந்திரா நீண்ட விடுப்பில் சென்றுள்ளாா். இந்நிலையில், காரைக்குடி நகராட்சி ஆணையாளராக இருந்த லட்சுமணன், ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

    Next Story
    ×