என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சங்கரன்கோவிலில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா பேரணி- ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  X

  பேரணியை ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

  சங்கரன்கோவிலில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா பேரணி- ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சங்கரன்கோவிலில் சுவாமி சன்னதியில் வைத்து தேசிய ஊட்டச்சத்து விழா நிகழ்ச்சி நடந்தது.
  • பேரணியை ராஜா எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  சங்கரன்கோவில்:

  சங்கரன்கோவிலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் அலுவலகம் சார்பில் சுவாமி சன்னதியில் வைத்து தேசிய ஊட்டச்சத்து விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் சுமதி, பேச்சியம்மாள் முன்னிலை வகித்தனர். இதில் ஊட்டச்சத்து மாதவிழா பேரணியை ராஜா எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

  இதில் குழந்தை பிறந்து 1000 நாட்கள் தாய் மற்றும் குழந்தை நலத்திற்கு ஆதாரமான நாட்களாக கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும், கர்ப்பம் என்று தெரிந்ததும் குழந்தைகள் மையத்தில் பதிவு செய்து அரசின் அனைத்து சேவைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், வட்டார உதவியாளர், அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×