search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் சாலை மறியல்
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    பொதுமக்கள் சாலை மறியல்

    • 48 பெண்கள், 6 ஆண்கள் உள்ளிட்ட 54 பேர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து கொண்டிருந்தனர்.
    • கழிவறை தொட்டிக்குள் விழுந்ததாக கூறி வீரப்படையான்பட்டி பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பூதலூர்:

    பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று வீரப்புடையான் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 48 பெண்கள், 6 ஆண்கள் உள்ளிட்ட 54 பேர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போதுபள்ளியின் பின்புறம் பயன்படு த்தப்படாத கழிவறை பகுதியில் தூய்மை பணி செய்தபோது எதிர்பாராத விதமாக தொட்டியின் மேல் பகுதி உடைந்து விழுந்ததில் 7 பெண்கள் உள்ளே விழுந்து காயம் அடைந்தனர்.அவர்களை மீட்டு பூதலூர் மற்றும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டனர்.

    இந்த நிலையில் மருத்துவ மனையில் அவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும், பள்ளியில் பணி செய்யும் போது அங்குள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், பெண் பணியாளர்களை மிரட்டி வேலை செய்ய வற்புறுத்தியதால்தான் கழிவறை தொட்டிக்குள் விழுந்ததாகவும் கூறி வீரப்படையான்பட்டி பஸ் நிலையம் அருகே இன்று காலை பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்ட னர்.

    சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவ ர்களுடன் பூதலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் நடந்த சாலை மறியலால் பூதலூர்- செங்கிப்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×