என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சென்னை லாட்ஜில் பாலியல் தொழில்- வெளிமாநில பெண்கள் 9 பேர் மீட்பு
- பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய தரகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- 4 செல்போன்கள், பணம் வசூலிக்கும் ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலை குப்பு முத்து தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் பாலியல் தொழில் நடைபெறுவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு விபாசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மாறுவேடத்தில் சென்று, அங்கு பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த வெளிமாநிலங்களை சேர்ந்த 9 பெண்களை மீட்டனர். அவர்களை இந்த தொழிலில் தள்ளிய தரகர்களான பூந்தமல்லி கண்டோன்மென்ட் பஜார் தெருவை சேர்ந்த பிரகாஷ் என்கிற ரவி (வயது 52), மாதவரம் கே.பி.கார்டன் பகுதியை சேர்ந்த ஏசு என்கிற சுதன் (31) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், பணத்தை வசூலிக்கும் 'ஸ்வைப்பிங்' எந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு தரகரை போலீசார் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட தரகர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட பெண்கள் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.