என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆசீர்வாதபுரத்தில் கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு
  X

  கபடி போட்டியை தொடங்கி வைத்த மாவட்ட செயலாளர் சிவபத்பநாபனுக்கு தி.மு.க. சார்பாக மாலை அணிவிக்கப்பட்ட காட்சி.

  ஆசீர்வாதபுரத்தில் கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போட்டியினை தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்பநாபன் தொடங்கி வைத்தார்.
  • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

  கடையம்:

  கடையம் அருகேயுள்ள ஆசீர்வாதபுரத்தில், 7 கிங்ஸ் கபடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக 15 - வது ஆண்டு மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. போட்டியினை தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்பநாபன் தொடங்கி வைத்தார்.

  வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ்மாயவன் தலைமை தாங்கினார். கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி தொழிலதிபர் பரமசிவன் முன்னிலை வகித்தார். போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றன. இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த கபடி வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

  முதல் பரிசை கருத்த பிள்ளையூர் அணியும், 2-வது பரிசை ஆசீர்வாதபுரம் அணியும், 3-வது பரிசை மடத்தூர் அணியும் , 9-வது பரிசை மேட்டூர் அணியும், 10-வது பரிசை வெய்க்கால்பட்டி அணியினரும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

  Next Story
  ×