search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலமோசடி வழக்கில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர், செயலருக்கு சிறை தேனி கோர்ட்டு தீர்ப்பு
    X

    கோப்பு படம்

    நிலமோசடி வழக்கில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர், செயலருக்கு சிறை தேனி கோர்ட்டு தீர்ப்பு

    • நிலமோசடி வழக்கில் முன்னாள் ஊராட்சித் தலைவர் மற்றும் செயலர் உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
    • தலா ஓராண்டு சிறைத் தண்டனை யும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்

    தேனி:

    நிலமோசடி வழக்கில் முன்னாள் ஊராட்சித் தலைவர் மற்றும் செயலர் உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    மதுரையைச் சேர்ந்த பைசுதீன் என்பவர் கடந்த 2005-ம் ஆண்டு தேனியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் திருமலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட இட த்தில் புதிய குடியிருப்பு பகுதிக்கான ஒப்பந்ததாரராக செயல்பட்டுள்ளார். இப்புதிய குடியிருப்புக்கு மதுரை மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்கு னர் அலுவலகத்தில் பிளாட் விற்பனைக்கான லே-அவுட் தயாரித்து அங்கீகாரம் பெறப்பட்டிருந்தது. இதன்படி மொத்த இடத்தில் 12 ஆயிரத்து 877 சதுர அடி பரப்பளவுள்ள இடத்தை திருமலாபுரம் ஊராட்சி பூங்காவிற்கு நில ஒப்படைவு செய்வதாக தெரிவிக்கப்ப ட்டிருந்தது.

    இந்நிலையில் பைசுதீன் போடி அருகே குப்பி நாயக்கன் பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ்வரன் என்பவருக்கு, ஊராட்சிக்கு ஒப்படைத்த நிலத்தில் போலியாக லே-அவுட் தயாரித்து பிளாட்டை விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து பிளாட்டை வாங்கிய வெங்கடேஸ்வரன் திருமலாபுரம் ஊராட்சி மன்றத்தில் பிளான் அப்ரூ வல் பெற்றுள்ளார்.

    போலி லே-அவுட் என்பதை யறிந்தும், அப்போது ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பழனியம்மாள், துணைதலைவர் பால்பாண்டியன் தற்போது வரை ஊராட்சி செயலராக பணிபுரிந்து வரும் குமரேசன் ஆகியோர் பிளான் அப்ரூவல் அளித்துள்ளனர்.

    இது குறித்து கடந்த 2013, ஜூன் 25-ம் தேதி ஆண்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த ரெங்கராஜன் அளித்த புகாரின் பேரில், தேனி குற்றப்பிரிவு போலீசார் பிளாட்டை விற்பனை செய்த பைசுதீன், பிளாட்டை வாங்கிய வெங்கடேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள், துணை தலைவர் பால்பாண்டி. ஊராட்சி செயலர் குமரேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இவ்வழக்கு விசாரணை தேனி ஜூடிசியல் நீதிமன்ற த்தில் நிதிபதி லலிதாராணி முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கு நடந்த போது ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் பால்பாண்டி உயிரிழந்தார். விசாரணை முடிந்ததை யடுத்து நீதிபதி லலிதாராணி நேற்று தீர்ப்பளித்தார்.

    இந்த தீர்ப்பில் வழக்கில் 2வது குற்றவாளியாக உள்ள வெங்கடேஸ்வரனை விடுதலை செய்தார். மீத முள்ளவர்களில் பைசுதீன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள், ஊராட்சி செயலர் குமரேசன் ஆகியோர் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்து, பைசுதீனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.9 ஆயிரம் அபராதமும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் மற்றும் ஊராட்சி செயலர் குமரே சன் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை யும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    Next Story
    ×