search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் ஆய்வு
    X

    போலீசார் ஆய்வு செய்த காட்சி.

    குமாரபாளையத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் ஆய்வு

    குமாரபாளையம் சேலம் - கோவை புறவழிச்சாலையில் விபத்துக்களை தடுக்க இன்ஸ்பெக்டர் ஆய்வு செய்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் சேலம் - கோவை புறவழிச்சாலையில் விபத்துக்கள் தடுக்க இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் கத்தேரி பிரிவு, டீச்சர்ஸ் காலனி, ஜே.கே.கே. நடராஜா கல்லூரி பிரிவு, எஸ்.எஸ்.எம் கல்லூரி பிரிவு, அருவங்காடு பிரிவு, பல்லக்காபாளையம் பிரிவு , உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது வேகமாக வரும் வாகனங்கள், வேகத்தை கட்டுப்படுத்த டிவைடர்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்தனர்.

    இதுகுறித்து இன்ஸ–்பெக்டர் ரவி கூறுகையில், விபத்து அடிக்கடி ஏற்படும் இடங்களில் டிவைடர்கள் அமைக்க இடம் ஆய்வு செய்யப்பட்டது. போக்குவரத்து போலீசாரும், புறவழிச்சாலை ரோந்து வாகன போலீசாரும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

    Next Story
    ×