என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விபத்தில் சிக்கியவரை மீட்க ஆம்புலன்ஸ் தாமதமானதால் பொதுமக்கள் சாலை மறியல்
  X

  கோப்பு படம்

  விபத்தில் சிக்கியவரை மீட்க ஆம்புலன்ஸ் தாமதமானதால் பொதுமக்கள் சாலை மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேவதானப்பட்டி பகுதியில் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • காயமடைந்தவரை மீட்க ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  தேவதானப்பட்டி:

  தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது38). இவர் புறவழிச்சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த பைக் மோதி படுகாயம் அடைந்தார்.

  அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதனால் கருப்பசாமி வலியால் துடித்துக்ெகாண்டிருந்தார்.

  இதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், பொதுமக்கள் மரங்களை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

  இது குறித்து அறிந்ததும் தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

  தேவதானப்பட்டி பகுதியில் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவசர தேவைக்காக 108 ஆம்புலன்சை அழைத்தால் வர தாமதமாகிறது.

  தேவதானப்பட்டியில் இருந்த ஆம்புலன்ஸ் வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட–தாகவும் அதனால் உயிர் பலிகள் ஏற்பட்டு வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

  எனவே இங்கு நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×