search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

    • பாளையில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ ஆயிரத்தம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
    • கும்பாபிஷேக விழாவான இன்று அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    நெல்லை:

    பாளையில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ ஆயிரத்தம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

    விழாவினை முன்னிட்டு கடந்த 22-ந்தேதி அதிகாலையில் மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்று மாலையில் தாமிரபரணியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜையும், இரவில் மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. மூலஸ்தானத்தில் உள்ள அம்பாளுக்கு யந்திர ஸ்தாபனம் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவான இன்று அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து மூர்த்திகளுக்கு ரக்சாபந்தனம்், நாடி சந்தானம் மகா பூர்ணாகுதி, தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் யாத்ரா தானம் நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது.

    காலையில் 6 மணிக்கு மேல் 7 .15-க்குள் மிதுன லக்னத்தில் விமானம் மற்றும் ஸ்ரீ ஆயிரத்தம்மன் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனா். இரவில் ஆயிரத்தம்மன் தூத்துவாரி அம்மன் உட்பட 9 கோவில்களில் உற்சவ மூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.

    Next Story
    ×