search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் - கோவில்பட்டியில் ஜி.கே.வாசன் பேட்டி
    X

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது எடுத்தபடம்.

    ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் - கோவில்பட்டியில் ஜி.கே.வாசன் பேட்டி

    • கடந்த 8 ஆண்டுகளாக பா.ஜ.க.வை வீழ்த்த பல முயற்சிகள் நடந்தும் தோல்வியில் தான் முடிந்துள்ளது. இதற்கு காரணம் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது.
    • தமிழக மக்களின் எண்ணங்களையும், அவர்களின் பிரச்னைகளையும் எதிரொலிக்கக் கூடிய கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விளங்குகிறது.

    கோவில்பட்டி:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 8 ஆண்டுகளாக பா.ஜ.க.வை வீழ்த்த பல முயற்சிகள் நடந்தும் தோல்வியில் தான் முடிந்துள்ளது. இதற்கு காரணம் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது.

    மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் மீதும், செயல்பாடுகள் மீதும் மக்கள் நம்பிக்கையோடு இருப்பதால் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்பு நடைபெறவில்லை. நடப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.

    இந்துக்கள் குறித்து ஆ.ராசா எம்.பி. பேசியது ஏற்புடையது அல்ல. தி.மு.க. அரசை பொறுத்தவரை வாக்குறுதிகள் மூலம் வென்ற அரசு. ஆனால் வென்ற பின் வாக்குறுதி களை நிறைவேற்ற தவறிய அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என காத்திருந்த மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டுள்ள அரசாக தி.மு.க. செயல்படுவது வேதனைக்குரிய ஒன்றாகும்.

    சில மாதங்களுக்கு முன்பு சொத்து வரியை உயர்த்தினர். தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். கொரோனா தொற்று காலத்தில் இருந்து மீண்டு நடுத்தர, ஏழை மக்கள் பொருளாதாரத்தில் படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கும் போது மக்களை தாக்குவது போல தி.மு.க. அரசு இச்சுமையை வைத்திருப்பது மக்கள் மீது அக்கறையில்லாத அரசாக காட்டுகிறது.

    மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாத அரசாக தி.மு.க. இருக்கிறது. தமிழக மக்களின் எண்ணங்களையும், அவர்களின் பிரச்னைகளையும் எதிரொலிக்கக் கூடிய கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விளங்குகிறது.

    ராகுல்காந்தியின் நடைபயணம் அவர்களது கட்சிக்கு வேண்டுமானால் நன்மையாக இருக்கும். போதை பொருள் நடமாட்டத்தில் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கும் மாநிலமாக இருப்பது வேதனைக்குரியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசின் கடமை.

    ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்து உயிரிழப்பு, சொத்துக்கள் இழப்பை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர்கள் கதிர்வேல், விஜயசீலன், நகரத் தலைவர் ராஜகோபால், நகர செயலாளர்கள் மூர்த்தி, செண்பகராஜ், வட்டாரத் தலைவர் ஆழ்வார்சாமி, மாணவரணி முத்துராமலிங்கம், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் திருமுருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்த னர்.

    Next Story
    ×