search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓணம் பண்டிகையையொட்டி சேலம் வழியாக மேலும் ஒரு சிறப்பு ரெயில்
    X

    ஓணம் பண்டிகையையொட்டி சேலம் வழியாக மேலும் ஒரு சிறப்பு ரெயில்

    • கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருவோணம் வருகிற செப்டம்பர் மாதம் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • அந்த வகையில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரளாவிற்கு 5 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    கேரள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருவோணம் வருகிற செப்டம்பர் மாதம் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கேரள மக்கள், ரெயில்களில் அதகம்பேர் செல்வது வழக்கம். இதற்காக முக்கிய நகரங்களில் இருந்து ஓணம் பண்டிகை சிறப்பு ரெயில்களை ரெயில்வே நிர்வாகம் இயக்குகிறது. அந்த வகையில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரளாவிற்கு 5 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் மேலும் ஒரு சிறப்பு ரெயிலாக பண்டிகை முடிந்தபின் ஊர் திரும்ப வசதியாக மங்களூரு- தாம்பரம் சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மங்களூரு சென்ட்ரல்- தாம்பரம் சிறப்பு ரெயில் (வண்டி எண். 06050) அடுத்த மாதம் 11-ம் தேதி இயக்கப்படுகிறது.

    மங்களூருரில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ெரயில் கோழிக்கோடு, பாலக்காடு , கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக சேலத்திற்கு காலை 7.52 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் 3 நிமிடங்களில் புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக தாம்பரத்திற்கு மதியம் 1.45 மணிக்கு சென்றடைகிறது.

    Next Story
    ×