என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆசிரியர் தினத்தையொட்டி பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே.மணி வாழ்த்து
  X

  ஆசிரியர் தினத்தையொட்டி பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே.மணி வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆசியர்கள் நாட்டையே, உலகையே உருவாக்கக் கூடியவர்கள் ஆசிரியர்கள் .
  • கல்வித்துறைக்கு அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

  தருமபுரி,

  பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே.மணி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளதாவது:-

  ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

  மாதா, பிதா, குரு, தெய்வம் எனவும் (ஆசிரியப் பெருமக்கள் கடவுளாகப் போற்றுக் கூடியவர்கள் என) எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்.

  ஒரு நாட்டின் தலை யெழுத்து வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது என்றும் நாட்டின் தூண்களாக விளங்கும் மாணவர்களை உருவாக்கும் சிற்பிகள் எனும் பெருமைக்குரியவர்கள் ஆசிரியப் பெருமக்கள்.

  கல்வி கற்ற அனைவரும் இன்று கற்றுக்கொடுத்த ஆசிரியப் பெருமக்களை ஒவ்வொருவரும் எண்ணிப் பார்த்து பாராட்டுவதும் போற்றுவதும் கடமையாகக் கருத வேண்டும்.

  குடியரசுத்தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், விஞ்ஞானிகள், நிபு ணர்கள், சான்றோர்கள், மேதைகள், பொருளாதார வல்லுனர்கள், தொழிலதி பர்கள் , தொழிலாளர்கள், அரசு ஊழியர், ஆசியர்கள் நாட்டையே, உலகையே உருவாக்கக் கூடியவர்கள் ஆசிரியர்கள் .

  தனி மனித வளர்ச்சிக்கும், ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும், ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கும் அடித்தளமாக கல்வி இத்தகு கல்வித்துறைக்கு அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

  மாணவச் செல்வங்களின் மகத்தான பாடநூல் ஆசிரியர்கள் என்று பாராட்டப்படுகின்றனர்.

  மாணவ - மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் அனைவரும் ஆசிரியர்களைப் பாராட்டும் நாள். மாணவ - மாணவியர்க்கு தரமான கல்வி கொடுக்க, கல்வி நிலையங்களின் குடிநீர், கழிப்பறை, மின்சாரம், ஆய்வுக்கூடம், சுற்றுச்சுவர், விளையாட்டுத் திடல் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் அரசு மேம்படுத்திக் கொடுக்க வேண்டும்.

  மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாடு ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பள்ளி - கல்லூரி - பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் பணி யாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் ,சிறப்பு ஆசிரியர்கள்உள்ளிட்ட அனைவரையும் நிரந்தர மாக்கி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.

  மனிதனின் இரண்டு புனித இடங்கள்:-உயிரைப் பெறும் தாயின் கருவறை. அறிவைப் பெறும் ஆசிரியரின் வகுப்பறை.

  ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் மனநிறைவுடன் மகிழ்ச்சியுடன் எல்லா வளமும் பெற்று குடும்ப நலமுடன் நீடூழி வாழ இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

  இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×