என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பலி
  X

  கிணற்றில் தவறி விழுந்து இறந்த மூதாட்டி.

  கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தோட்டத்தில் உள்ள கிணறு அருகே இயற்கை உபாதையை களிப்பதற்காக சென்றார்.
  • கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய மூதாட்டியை காப்பாற்றினாரகள்

  பரமத்தி வேலூர்:

  நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பொம்மம்பட்டி, கணக்கம்பாளையம், கிழக்கு தோட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணன், விவசாயி. இவரது மனைவி பாப்பாயி (90). இவர் நேற்று அவரது தோட்டத்தில் உள்ள கிணறு அருகே இயற்கை உபாதையை களிப்பதற்காக சென்றார்.

  அப்போது நிலைதடுமாறி சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தார்.சத்தம் கேட்டு அருகில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய மூதாட்டியை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் பாப்பாயி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து வேலக வுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  Next Story
  ×